Tuesday, May 19, 2020

Paranai - II

Dwadashi Paranai - This menu is pretty standard every Dwadashi - All over India - Dwadashi marks the ceremonious breaking of  ekadashi fast! It's a super detoxifying  meal with no tamarind and very less chilies. This time I added -
Snigdhannam or AkkaraVadial & Dadyodanam or fluffy curd rice to this menu.
Strictly ghee / coconut oil only for cooking today.
  1. WhitePumpkin Mor Kulambu
  2. Tomato / Cocum rasam
  3. Vazhaikkai Upperi
  4. Moong Dhal
  5. Snigdhaannam ( Akkara Vadisal)
  6. Dadyaannam (Curd Rice)
  7. Goose Berries
  8. Keerai Mulakoottal
  9. Ghee
  10. Quinoa rice
Note: While cooking moong dhal, add 1/2 tsp of ghee in it. It prevents moong dhal from raising like a fountain from cooker.
  1. பயத்தம் பருப்பு 
  2. கீரை மொளகூட்டல் 
  3. ஸ்னிக்தான்நம்  (அக்கார வடிசல்)
  4. தத்யோதனம்  (தயிர் சாதம்)
  5. தக்காளி / குடம் புளி இரசம் 
  6. தோல் நீக்கிய வாழைக்காய் உப்பேரி
  7. பூசணிக்காய் மோர் குழம்பு (சுண்டைக்காய் வத்தல் சேர்த்து)
  8. நீர் நெல்லிக்காய் 
  9. புத்துருக்கு நெய் 
  10. குனோவா சாதம் 
ஏகாதசி அன்று கண்ணனை நினைந்து உபவாசமாக இருந்து, துவாதசி அன்று விடியற்காலையில் எழுந்து துளசி/ சாளக்ராம அபிஷேக தீர்த்தம் அருந்தி, கண்ணன் நாமத்தால் சுண்டைக்காய், நெல்லிக்காய் , அகத்திக் கீரை உண்ண- அவைகள் கோவிந்தா கோவிந்தா  என்று சொல்லிக்கொன்றே உள்ளே செல்லும் என்பது நம் மரபு. ஆனால் - நெல்லிக்காய் - இரும்பு சத்து, சுண்டைக்காய் விதை - கிருமி (குடற் புழு )நாசினி, அகத்தி கீரை - மலமிளக்கி - இப்படி உடல் நலத்திற்காக மருந்தையும் சேர்த்து வழங்கினார்கள் நம் முன்னோர்கள்.அகத்திக் கீரை  சாப்பிட்டால் பேதி ஆகும் என்பதால் - மாதத்திற்கு இரு முறை தான் அதனை உட்கொள்ள வேண்டும் என்பது சித்த மருத்துவத்தின் விதி.
ஏகாதசி அன்று பச்சை பட்டினியாய் இருந்து வயிறு காய்ந்து போயிருக்கும் என்பதால், துவாதசியன்று விடியற்காலையில் - துவாதசி திதி இருக்கும் பொழுது - நித்ய கர்மாநுஷ்டானம், பூஜை முதலியவற்றை முடித்து, துளசி தீர்த்தம், அருந்தி பாரணை செய்தல் என்பது உடலுக்கும், உள்ளத்துக்கும் மிக சிறந்தது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர் வரை ஆச்சரிக்க கூடிய விரதம்! என்ன அற்புதம் பார்த்தீர்களா? கோவிந்தா நாமம் ஒன்றே போதும்! 
காப்பியில் அமிலமும், தேநீரில் துத்தநாகமும் உள்ளது - வெரி வினையே வேண்டாம்! இன்றைக்கு நம்மறவர்களுக்கு வரும் வியாதிகளில் பாதியும் இந்த பொல்லா காபி மற்றும் தேநீரால் வருவன என்பதை நாம் அறிய வேண்டும்.
நேரம் இருந்தால் - தைத்திரீய உபநிஷத், நரசிம்ம தாபினி  பாராயணம் செய்யலாம்! 
வெறும் வயிற்றில் பாரணை உண்டால் முழுப்பயனையும் அடையலாம்!காப்பியை அருந்தி பாரணை சாப்பிட்டால் - மருத்துவ பயன்கள் வீணாய் போகும்! விரதமும் வீணாகி விடும்! கண்ணன் அருளால் காப்பி அருந்தாமல் இருப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் நல்லது.







No comments:

Post a Comment

Pala Vathal Kuzhambu

arlier - Chaturmasyam started on the fiirst of Suryamana (Tamil) month of Ashada - which was ont he 16th of July. For four months - each m...